முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி அதிரை மாணவன் படுகொலை !!!

Share on
அதிராம்பட்டினம் கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [ வயது 20 ] , அதிரை பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர் முஹைதீன் [ வயது 23 ]

நேற்று [ 23-11-2012 ] மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்
தியால் சரம
ாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்த அதிரை த.மு.மு.க வினருக்கு சொந்தமான ஆம்புலன்சில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதியளிக்கப்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி இன்று [ 24-11-2012 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் உயிர் பிரிந்தன [ இன்னா லில்லாஹி...] பிரத பரிசோதனையடுத்து உடல் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

கத்தியால் குத்திய காதர் முஹைதீன் காவல்துறையில் சரண் அடைந்ததை தொடர்ந்து வழக்கு அவர் மீது போடப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட விரோதத்தின் காரணமாகவே கத்திகுத்து நடைபெற்றது என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இச்சம்பவம் தெருவின் முக்கிய பகுதியில் நடைபெற்றதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :