Share on

ஏ.எல்.ஜனூவர்
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீத் பி.ஏ. ( பா.உ ) அவர்கள் மரணித்து ஓராண்டு பூர்த்தி இன்றாகும். இதனை முன்னிட்டு சம்மாந்துறை மாலை வட்டமும், சமூக சேவை அமைப்புக்களும் இணைந்து நடாத்திய கத்தமுல் குர்ஆனும், துஆ பிரார்த்தனையும் மாலை வட்டத்தின் இணைத் தலைவர்களான அம்பாரை மாவட்ட செயலகத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஏ. பாவா, ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஏ. மஃறூப் தலைமையில் சம்மாந்துறை எம்.ஏ. அப்துல் மஜீத் மண்டபவத்தில் இன்று இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் அந்நாரின் ஆத்மா சாந்தி அடைய அல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்பட்டதுடன், உலமாக்களினாலும் விஷேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது துஆ பிரார்த்தனையை அப்துல் காதர் மௌலவியினால் நடாத்தி வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் அம்பாரை மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகிய ஏ.எம். நௌசாத் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா உட்பட உயர் அதிகாரிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
1960 ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரை சுமார் 34 வருடகாலமாக பாராளுமன்ற உறுப்பினராகவும், காணி, விவசாய மற்றும் எரிபொருள் மின்சக்தி, மற்றும் தபால் தந்தி தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராகவும், நெசவுக் கைத்தொழில் அமைச்சராகவும், 1981ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் இருந்து சம்மாந்துறை தொகுதி மக்களின் கல்வி, வீடமைப்பு, மின்சாரம், வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்து முன்மாதிரி அரசியல் வாதியாக செயற்பட்டவர் முன்னாய் அமைச்சர் மர்ஹூம் அப்துல் மஜீத். இவருடைய ஆட்சிக் காலம் அம்பாரை மாவட்டம் ஒரு அபிவிருத்தி யுகமாக காணப்பட்டது எனக் கூறலாம். இவர் சாதி, சமய, அதரவாளர் என்ற வேறுபாடுகளை களைத்தெறிந்துவிட்டு எல்லோரையும் சமத்துவமாக நோக்கியதனால் 'முடி சூடா' மன்னன் என பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். 85 வயதில் 2011.11.29ம் திகதி சம்மாந்துறை மண்ணில் இறையடி ஏய்தினார். அவரின் வாழ்வு வாழ்கின்ற, வாழப்போகின்ற அரசியல் தலைவருக்கும் முன் உதாரணமாகும்.

0 comments :
Post a Comment