சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு




பாறுக் ஷிஹான்-
ல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் புதிய சட்ட நூலகம் இன்று சட்டத்தரணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்ப்பட்டுள்ளது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு வைபவம் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கௌரவ அதிதிகளாக கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் முதலில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட பின்னர் புதிய சட்ட நூலகம் அதிதிகளால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மத அனுஸ்டானம் இடம்பெற்றதை தொடர்ந்து கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி 40 வருட காலத்தின் பின்னர் புதிய நூலக அமைக்கப்பட்ட வரலாறு அதற்கான உதவிகள் குறித்து தலைமையுரை வழங்கி வைத்தார்.

தொடர்ந்து பிரதம அதிதி கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கருத்து தெரிவிக்கையில்

கல்முனை நீதிமன்ற வளாகம் என்பது ஆளுமைகளின் ஒரு ஊற்றாக அமைந்துள்ளது.பலரது எதிர்பார்ப்புடன் இவ்விடயம் நீண்ட காலத்தின் பின்னர் இன்று இடம்பெற்றதனை நான் வெற்றி களிப்பாக கருதுகின்றேன்.கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இந்நிகழ்வு நடைபெறுவது இரட்டிப்பான மகிழ்ச்சியை தருகின்றது.பறக்க முடியாதவர்கள் ஓட வேண்டும்.ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும்.நடக்க முடியாதவர்கள் தவழ வேண்டும்.தவழ முடியாதவர்கள் உருண்டு கொண்டு இருக்க வேண்டும்.ஏனெனில் நாம் எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து.நமக்கு இருக்க கூடிய தகைமை திறமை அடிப்படையில் இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.கற்பவனாக இரு அல்லது கற்று கொடுப்பவனாக இரு என்று சொல்வார்கள்.குறைந்தது கற்பவனுக்கு உதவி செய்த ஆளாகவாவது இரு சோம்பேறியாக இருந்து விடாதே என்பார்கள்.கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதியை பாரக்கின்ற போது இவ்வாறான விடயங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.அடுத்து வருகின்ற தலைமுறையான இளம் சட்டத்தரணிகளுக்கு இந்நூலகம் உந்துசக்தியை வழங்கும் .நீதி வரம்பிற்குள் நின்று இளம் சட்டத்தரணிகள் தங்களது சேவைகளை செய்ய வேண்டும்.இல்லாவிடின் குறித்த சட்டத்தரணியை அவரது கட்சிக்காரரே விமர்சிக்கின்ற சூழ்நிலை வரும்.எனவே தான் சட்டத்தரணிக்கும் அவரது கட்சிக்காரருக்கும் தகுந்த இடைவெளியை பேணுவதன் ஊடாக உரிய மரியாதையை சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த இடைவெளியை தொடர்ச்சியாக பராமரிப்பதன் ஊடாக நிலையான ஒரு உறவினை கட்டியெழுப்ப முடியும் .என்றார்.

இறுதியாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலரது பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற பெறுமதியான சட்டப்புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக புதிய சட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :