Great Tomorrow அமைப்பின் இலவச பயிற்சிப் புத்தகங்கள் விநியோகிக்கும் முதற்கட்ட நிகழ்வு அல்-ஜலால் வித்யாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Great Tomorrow அமைப்பின் உறுப்பினர்களின் பூரண பங்களிப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கமு / அல்-ஜலால் மற்றும் கமு / அல்-பஹ்ரியா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சிப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக அல்-ஜலால் வித்தியாலய அதிபர் சைபுத்தீன் மற்றும் அல்-பஹ்ரியா வித்யாலய அதிபர் எம்.ஸ்.எம். பைஸால் உட்பட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment