முஸ்லிம் அடிப்படைவாத கருத்துக்களை முகநூலில் பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடியில் PHI ஒருவர் கைது!

மு
ஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்து வந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாலை (02) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 3 மாத கால பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் பொது சுகாதார உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் 38 வயதுடைய குறித்த நபர் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாத கொள்கைகளை முகநூலில் தரவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளை பேணிவந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (02) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 3 மாத பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.தெரண
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :