தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்க தீர்மானம்!


M.I.இர்ஷாத்-

னியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற தொழில் ஆலோசனை சபை கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடையும் நிலை காணப்படுவதால் ஊழியர்களின் ஆளணியில் வெற்றிடங்கள் ஏற்படலாம் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த துறைகளில் உரிய தகமையைக் கொண்டுள்ள ஊழியர்களின் சேவையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60வரை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :