நாடளாவிய ஊரடங்கு சட்டம் குறித்து- இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா கருத்து!


J.f.காமிலா பேகம்-

நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டத்தினை அமுல்படுத்தப்படமாட்டாது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ந்தும் றீடிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வர்த்தக நிலையங்களை இன்று காலை 8.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை திறந்து வைக்க முடியும் என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பொருட் கொள்வனவுக்காக வெளியில் செல்லும் போது, ஒரு தடவை மாத்திரம் வெளியில் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.

மேலும், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், வீட்டிற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளதுடன், தூரபிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, 19 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா , கணேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அதேபோன்று, களனி வலயத்திற்குட்பட்ட ஜா எல, கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கும் நீர் கொழும்பு வலயத்திற்குட்பட்ட திவுலப்பிட்டிய, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :