J.f.காமிலா பேகம்-
கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவும் தீவிர ஆபத்தைக் கொண்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஷெனல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் தினமும் 10000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு முறையான சூத்திரம் பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன் அதனை தெளிவாக அரசாங்கம் அறிவிக்கவும் வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சுகாதார அமைச்சு, தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு மற்றும் கோவிட்-19 தொற்று ஒழிப்பு படையணி என்பன இணைந்து ஓரிடத்திலிருந்து செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment