Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

புராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும் கும்பல்களை தண்டிக்க வேண்டும்


டந்த சில மாதங்களுக்கு முன்பு புராதன விகாரை ஒன்றில் அதாவது பராமரிப்பற்று கிடந்த விகாரை ஒன்றின் மீது மாணவர்கள் பாதணிகளோடு நின்று செல்பி புகைப்படம் எடுத்த ஒரே காரணத்திற்காக அவர்களை சிறையில் அடைத்தார்கள் இதற்கு சஜித் பிரேமதாச அவர்கள் முழு மூச்சாக நின்று செயட்பட்டார்கள் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றுவரை முஸ்லீம் மக்களின் பள்ளிவாசல்கள் வெறித்தனமாக உடைக்கப்படுகின்றது சொத்துக்கள் தீக்கரை ஆக்கப்படுகின்றது இவற்றை எந்த ஒரு பெரும்பான்மை அரசியல் வாதிகளும் தடுத்து நிறுத்துவதற்கு முயட்சிகளை மேற்கொள்ளவில்லை

இவ்வாறு பெரும்பான்மை அரசியல் வாதிகள் மெளனமாக இருப்பதற்கு என்ன காரணம் ? நீங்கள் வணங்கி வழிபடும் தேவாலயங்கள் விகாரைகள் போன்று முஸ்லிம்களது பள்ளிவாசல்களும் புனிதமான ஒன்று என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை இத்தனை கொடுமைகள் செய்தும் இதுநாள்வரையில் ஒரு விகாரைகளை கூட தாக்குவதற்கு முயட்சிக்க வில்லை அவ்வாறான கீழ்த்தரமான செயலை செய்வதற்கு உண்மையான முஸ்லீம் சமூகமும் விரும்பப் போவதும் இல்லை
சிங்களவர்களானாலும் தமிழர்களானாலும் முஸ்லீம்களானாலும் கிறிஸ்தவர்களானாலும் அனைவரும் மனிதர்கள் என்பதை மறந்து விடக்கூடாது அனைவருக்கும் பசி உறக்கம் வலி வேதனை இது போன்ற அனைத்து உணர்வுகளும் உண்டு

இந்த நாட்டில் ஊடகங்கள் முஸ்லீம்கள் ஏதேனும் ஒரு குற்றத்தினை செய்து விட்டால் முஸ்லீம்கள் என்று பிரம்மாண்டமாக செய்திகளை பரப்பி வரும் சந்தர்ப்பத்தில் பள்ளிவாயல்களை நொறுக்கி இன வெறியினை காட்டுபவர்களை இனம்தெரியாத நபர்கள் என்று சுருக்கமாக சொல்லி முடித்து விடுகின்றார்கள் இந்த நாட்டின் #சட்டப்புத்தகம் #சிங்களவர்களுக்கு #வேறாகவும்#முஸ்லீம்களுக்கு #வேறாகவும் #தமிழர்களுக்கு #வேறாகவும் #என்றா #எழுதப்பட்டிருக்கின்றது சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்

நீங்கள் இன்று இந்த சமூகத்தில் எதை விதைக்கிண்றீர்களோ அதையே பின்பு அறுவடை செய்ய வேண்டும் எனவே கெளரவ சஜித் பிரேமதாச அவர்களே அன்று முஸ்லீம் மாணவர்களை கைது செய்வதில் நீங்கள் காட்டிய ஆர்வத்தில் அரைப்பங்காவது பள்ளிகளை உடைத்து நாசமாக்கும் இனவெறியர்கள் மீது செலுத்துங்கள் முஸ்லீம் சமூகம் உங்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்திருக்கின்றது அதை பொய்யாக்கி விடாதீர்கள் அதேபோன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமே தவிர இவ்வாறான இனக்கலவரங்களை தூண்டுவதில் ஆர்வமாக இருக்கக் கூடாது
23 இலட்சத்துக்கும் அதிகமாக இலங்கை நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு குரல்கொடுக்கவும் இனவாத சக்திகளில் இருந்து பாதுகாக்கவும் அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் மிகவும் பாடுபட்டு வருகின்றார் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அமைப்பிற்கும் முழு பங்காற்றியவர் இந்த அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் எண்பக்தை நீங்கள் மறந்து விட வேண்டாம் எனவே உங்கள் ஆட்சி இன்று நடைபெறுவதற்கு முஸ்லீம் மக்கள் எத்தனை பங்களியுப்பு செய்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் நினைவு கூற வேண்டும்
முஸ்லீம்கள் உங்களிடம் பணம் கேற்கவில்லை இந்த நாட்டில் எந்த பிரச்சனைகளும் இன்றி நிம்மதியான ஒரு வாழ்க்கையினைத்தான் கேட்டு நிட்கின்றோம் எனவே
மீண்டும் ஒரு நிம்மதியான இலங்கையினை எமக்கு பெற்றுத்தாருங்கள் இந்த இலங்கை நாடு இயற்கையில் மாத்திரம் எழில்கொண்ட நாடு அல்ல மனிதம் நிறைந்த அழகிய நாடு என்பதையும் நிரூபிக்க வேண்டும்

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.