ஜனாதிபதி மாளிகையில் றிசாத் ரங்கா இருவருக்கும் இடையில் கைகலப்பு!

நேற்று இரவு 11 மணிக்கு அமைச்சர் ரிஷாத், பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, சட்டத்தாரணி என்.எம் சஹீத் ஆகியோர் ஜனாதிபதியினைச் சந்திக்க அலரி மாளிகை சென்றுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,சட்டத்தரணி என்.எம் சஹீத் ஆகியோர் வெளியில் இருக்க அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குச் சென்றாராம். 

அவர் சென்ற போது அங்கே மின்னல் நிகழ்ச்சி நடாத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரங்கா,  எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதி செயலக பிரதானி காமினி செனரத் அங்கே காணப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவைக் கண்ட அமைச்சர் ரிஷாத் அவர் மீது பாய்ந்ததாகவும் இருவருக்குமிடையிலான பிரச்சினைகள் கைகலப்பாக மாறினதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் , இதன்போது தனக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களை நிரூபிகிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிடம் அமைச்சர் றிசாத் உரத்துக் கத்தியுள்ளார். 

இதன்போது அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.’

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா மீது அமைச்சர் றிசாத் அறைந்து தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளார். 

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோர் தலையீட்டு இந்த சண்டையினை முடிவுக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -