மனமில்லாமல் அரசுடன் இணையும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

சூறாவளி -

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசின் முக்கிய அமைச்சர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நாளை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழுவிற்கும்இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதுதொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த மாவட்ட அரசாங்க அதிபர்களும்கலந்து கொள்ளவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்போகின்றது என்ற விடயம் அரச தரப்பிற்கு தெரியவந்த நிலையில்தான் முஸ்லிம்காங்கிரஸை தம்பக்கம் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளில் அரச மேல்மட்டம் முயற்சித்துவருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள ஒரு சிலரும் பிராந்திய சபையின் உறுப்பினர்கள்சிலரும் அரசுக்கு ஆதரவாக மிக ரகசியமான முறையில் செயற்பட்டு வருவதன் எதிரொலியாகவே முஸ்லிம்காங்கிரஸ் தீர்க்கமான முடிவொன்றை எடுக்காமல் குழும்பிப் போய் உள்ளதாக கூறப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்குதீர்மானித்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில்தலைவர் ரவுப் ஹக்கீம் இருக்கின்ற நிலையில் ஒரு சில உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஸவிற்குஅதரவளிக்குமாறு ஹக்கீமை தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகவும் கதைகள் கசிந்துள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் நாளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கஅமைச்சர்களுக்குமிடையிலான சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும்கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கட்சித் தலைவர் ஹக்கீமின் முடிக்கு எல்லோரும் ஆதரவளிப்போம் என்று பையத் செய்துள்ள நிலையில் நாளைய சந்தி்ப்பில் மனம் இல்லாதவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி்ன்றது.

பெரும்பாலும் நாளைய சந்திப்புடன் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைள். உடனடியாகநடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்கும்என கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -