பௌத்தர் பிரச்சினையை நிவர்த்தி செய்யமுடியாவிட்டால் அரசங்கத்தை மாற்றுவோம்-மாநாட்டில் BBS

லங்.முஸ்-

லங்கை ஒரு சிங்கள ,பெளத்த நாடு , இலங்கையில் பௌத்தம்எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யமுடியாவிட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிக்க போவதில்லை, இந்த நாட்டை வழிநடாத்த கிராமத்தில் இருந்து ஒரு நபரை கொண்டுவருவோம் என பொது பல சேனா அமைப்பின் தலைவர் விமலா ஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு உரையாற்றியுள்ள அவர் , 

இது ஒரு சிங்கள பெளத்த நாடு, இலங்கை ஒரு பலமத நாடு அல்ல. இலங்கையில் பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளோம் பௌத்தம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யமுடியாவிட்டால் வேறு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிக்க போவதில்லை. இங்கு பௌத்தம் சில தீவிரவாத முஸ்லிம் , கிறித்தவ அமைப்புக்களினால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா ஏற்பாடு செய்துள்ள பெளத்த மாநாடு கொழும்பில் இடம்பெறுகிறது. அங்கு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

இந்த மாநாட்டுக்கு அதீதியாக அழைக்கப்பட்ட மியன்­மாரின் தீவிரவாத இயக்கமான ‘969’ இயக்­கத்தின் தலை­வ­ரான அசின் விராது தேரர் கலந்து உரையாற்றியுள்ளார் , அவர் உரையாடும்போது மியன்­மாரின் ‘969’ இயக்­கம் பொது பல சேனாவுடன் இணைந்து உலக முழுவதிலும் பௌத்தத்தை பாதுகாக்கும் என தெரிவித்துள்ளதுடன், தனக்கு விசா வழங்க வேண்டாம் என கோரப்பட்ட போதும் இங்கை வருவதற்கு தனக்கு விசா வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாகதெரிவித்துள்ளார்.


இலங்கையிலுள்ள ஜம்இய்யதுல் உலமா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பாகும் என பொதுபலசேனா அமைப்பு இன்று அறிவித்தது.

சுகதாஸ உள்ளக அரங்கில் தற்போது இடம்பெறும் பொதுபலசேனா அமைப்பின் மகா சங்க மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
" இந்த அமைப்பு சில வருடங்களுக்கு முன்னரே பதிவுசெய்யப்பட்டது. எனினும் இந்த ஜம்இய்யதுல் உலமா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பாகும்.

அத்துடன் இலங்கை ஒரு பௌத்த நாடே தவிர பல சமயங்கள் வாழும் ஒரு நாடல்ல. ஆனால் இலங்கையில் வாழும் பௌத்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். 

சில தீவிரவாத முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ குழுக்களினாலேயே பௌத்தர்களுக்கு எதிரான பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறில்லாவிட்டால் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு நாங்கள் வெட்கப்படமாட்டோம். சுமார் பல்லாயிரம் சட்டவிரோத குடிவரவு இலங்கையில் உள்ளது. இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதேவேளை, பொதுபலசேனா அமைப்பு பயங்கராவதிகள் என தெரிவிக்கப்படும் விடயத்தினை அந்த அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி நிராகரித்தார்.

லங்.முஸ்-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :