காத்தான்குடி தெற்கு பிரிவுகளுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராக அஷ் ஷெய்க் அல்ஹாபிழ் கே. முஹம்மது றஷீல் (ரஷாதி) நியமனம்



காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அஷ் ஷெய்க் அல்ஹாபிழ் கே. முஹம்மது றஷீல் (ரஷாதி) BA Hons, JP WI அவர்கள், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் தெற்கு 164A, 162A, 162B மற்றும் 164B ஆகிய பிரிவுகளுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட இந்நியமனத்துக்கான உத்தியோகபூர்வக் கடிதத்தை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் முன்னிலையில், கிழக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் க. நடராசா அவர்களிடமிருந்து கடந்த 10.09.2026 அன்று அவர் பெற்றுக்கொண்டார்.

மர்ஹூம் அல்ஹாஜ் ML. குதுபுதீன் மற்றும் MS. பௌசுல் ஹினாயா தம்பதியினரின் மூன்றாவது புதல்வரான இவர், தனது ஆரம்பக் கல்வியை ஒல்லிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்திலும், பின்னர் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார்.

அதனைத் தொடர்ந்து ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் ‘ஹாபிழ்’ பட்டத்தையும், காத்தான்குடி ஸபீலுர்ரஷாத் இஸ்லாமிய மார்க்கக் கல்லூரியில் ‘மௌலவி (ரஷாதி)’ பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இதே கல்லூரியில் ‘தௌறதுல் ஹதீஸ்’ எனும் ஹதீஸ் உயர் கற்கைநெறியையும் ஓராண்டு காலம் பூர்த்தி செய்துள்ளார்.

மேலும், கல்வி அமைச்சினால் நடத்தப்படும் தர்மாசார்யா – அல் ஆலிம் பரீட்சைகளில் முதவஸ்ஸிதா மற்றும் தானவிய்யா ஆகிய பகுதிகளில் தோற்றி சித்தியடைந்ததுடன், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கலைமாணிப் பட்டத்தையும் (BA Hons) பெற்றுள்ளார்.

சிறந்த ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் நேர்மையுடன் சமூகத்தின் மீது சிறுவயது முதலே அக்கறை கொண்ட சமூகச் செயற்பாட்டாளராகவும் இவர் விளங்கி வருகின்றார். கல்வி, ஆன்மீகம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் இவர் ஆற்றிவரும் அர்ப்பணிப்புடனான சமூக சேவையைப் பாராட்டி, அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் ‘தேசிய ஜோதி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது காத்தான்குடி அல் பத்ர் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராகவும், ஆயிஷா பிந்த் அபூபக்கர் பள்ளிவாயலின் பேஷ் இமாமாகவும் கடமையாற்றி வருகின்றார்.

சமய, தஃவா மற்றும் சமூகப் பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் நிர்வாக உறுப்பினராகவும், இத்திஹாதுர் ரஷாதிய்யீன் அமைப்பின் ஆலோசகராகவும், மனிதநேயம் மற்றும் சமூக சேவைக்கான இளம் உலமாக்கள் அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் சபை உறுப்பினராகவும், காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் நலன்புரி அமைப்பின் பொதுச் சபை உறுப்பினராகவும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினராகவும் சமூகப் பணிகளில் பங்களித்து வருகின்றார்.

இந்நிலையில், புதிதாக முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள அஷ் ஷெய்க் அல்ஹாபிழ் கே. முஹம்மது றஷீல் (ரஷாதி) அவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பின் ஊடாக மக்களுக்கான சேவையை மேலும் சிறப்பாக முன்னெடுக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

– அஷ்ஷெய்க் AMM. தஸ்லீம் (ரஷாதி)
விரிவுரையாளர், அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனம்
செயலாளர், இத்திஹாதுர் ரஷாதிய்யீன்
காத்தான்குடி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :