அண்மையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி, 20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (17) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், தற்போது பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment