மலேசியாவின் ஜென்டிங் ஹைலாண்ட்ஸில் நடைபெற்ற ஜென்டிங் இன்டர்நேஷனல் அபாகஸ் மனக்கணிதப் போட்டி 2026 இல் பங்கேற்ற இலங்கை மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ICAM ABACUS நிறுவனத்தின் 38 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கடுமையான போட்டி நிலவிய இந்நிகழ்வில் ICAM மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்று சர்வதேச மட்டத்தில் தங்களது திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
போட்டி முடிவுகளின்படி, 14 முதல் இடங்கள், 17 இரண்டாம் இடங்கள், 24 மூன்றாம் இடங்கள், 10 நான்காம் இடங்கள், 11 ஐந்தாம் இடங்கள் என மொத்தமாக பல விருதுகளை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வெற்றியானது அபாகஸ் மற்றும் மனக்கணிதக் கல்வித் துறையில் இலங்கை மாணவர்கள் கொண்டுள்ள திறமையையும், சர்வதேச அரங்கில் போட்டியிடும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
மாணவர்களின் இச்சாதனைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், எதிர்காலத்திலும் சர்வதேச தரத்திலான போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து புதிய சாதனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடரும் என ICAM ABACUS நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment