இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மையப்படுத்தி அமைப்பாளர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூக நலப்பணிகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட விரும்பும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவ்வாய்ப்பின் மூலம் அமைப்பின் செயற்பாடுகளுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
புதிய அலை கலை வட்டம் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சமூகத்தில் திறமையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மேடைகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், மாவட்ட மற்றும் பிராந்திய ரீதியான செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் இந்த அமைப்பாளர் நியமனத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்ப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு புதிய அலை கலை வட்டம் அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment