இதற்கு முன்னர், புதிய அலை கலை வட்ட மகளிர் அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளராக சிறப்பாகப் பணியாற்றிய அவர், தனது அர்ப்பணிப்பான சேவைகள், அமைப்பாற்றல் மற்றும் சமூகப் பங்களிப்புகளின் காரணமாக இப்புதிய பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவின்போது, நிர்வாக உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவும் வரவேற்பும் அவருக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப். பெளசுல் சிபானியா ஒரு கலைப்பட்டதாரி ஆசிரியையாக கல்விப் பணியாற்றுவதோடு, தமிழ் இலக்கணத்தையும் மரபுக் கவிதை மரபுகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவராவார். அவரது இலக்கிய ஆற்றலுக்குச் சான்றாக "அந்திக்கரை" என்ற மரபுக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மேலும், "முற்றத்து நிலா பாடல்" என்ற நூலையும் எழுதி வெளியிட்டு இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.
இலக்கியப் பங்களிப்புகளுக்காக கவித்தாரகை, தேசபிமானி, விஸ்வகீர்த்தி (கல்வி), ரத்னதீப, கவிசுடர், கவித்தென்றல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ள அவர், சமூக விழிப்புணர்வு, கல்வி மற்றும் பொதுச் சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறான அவரது இலக்கியத் திறமை, கல்விச் சேவை மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பாராட்டி, புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனரும் தலைவருமான ராதாமேத்தா, மகளிர் அணியின் உபத் தலைவர் பதவிக்கு எம்.எப். பெளசுல் சிபானியாவை நியமித்துள்ளார்.
இந்நியமனம், புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் என்பதில் அமைப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment