தேசிய ரீதியில் களம் காணும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இணைப்பாளர்கள் ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும் நாளை



புதிய அலை கலை வட்டத்தின் தேசிய ரீதியிலான மகளிர் அணியின் இணைப்பாளர்கள் ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை (21) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, கொழும்பு–13, இலக்கம் 176, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் அணியின் இணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்தச் சந்திப்பில், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள், பெண்களின் சமூக மற்றும் கலாசார பங்களிப்புகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள், மாவட்ட மட்டத்திலான செயற்பாட்டு விரிவாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், பொறுப்பாளர்களைத் தெரிவு செய்தல் மற்றும் எதிர்கால செயல் திட்டங்களுக்கான அடித்தளத்தை அமைத்தல் என்பனவும் இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களாக அமையவுள்ளன.

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியுடன் தம்மை இணைத்துக் கொண்டு சமூக, கலை மற்றும் பண்பாட்டு செயற்பாடுகளில் பங்காற்ற விரும்பும் பெண்கள் அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டு தங்களது அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மகளிரின் ஆற்றலையும் தலைமைத்துவத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, தேசிய மட்டத்தில் மகளிர் அணியின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய சந்திப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :