கிழக்கு மாகாண தொழில்முனைவோருக்கான விசேட வணிக மேம்பாட்டு செயலமர்வு ஜூலை 5ஆம் திகதி



கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களின் தொழில் வளர்ச்சி, வணிக விரிவாக்கம் மற்றும் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் "Empowering Entrepreneurs: A Special Business Development Workshop for the Eastern Province" எனும் விசேட வணிக மேம்பாட்டு செயலமர்வு எதிர்வரும் 2026 ஜூலை 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக (South Eastern University of Sri Lanka) கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் தொழில்முனைவோர்கள், புதிய தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்பும் அனைவருக்கும் இச்செயலமர்வு பயனுள்ளதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செயலமர்வில் வணிக அபிவிருத்தி, தொழில் விரிவாக்க உத்திகள், சந்தைப்படுத்தல், தொழில்முனைவு வாய்ப்புகள் மற்றும் நடைமுறை அனுபவங்கள் தொடர்பான பல்வேறு அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

ஏற்பாட்டாளர்களின் அறிவிப்பின்படி, இருக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். எனவே, பங்கேற்க விரும்புவோர் தங்களது இடத்தை உறுதிப்படுத்துவதற்காக உடனடியாக பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பதிவு செய்ய விரும்புவோர் பின்வரும் இணைப்பின் மூலம் முன்பதிவு செய்யலாம்:

https://forms.gle/LT5HsEqLZ4rMfVs2A
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :