குருணாகல் பிரதிமேயர் அஸாருடீன் கட்சி றுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் :

கு
ருணாகல் மாநகர சபையின் ஒப்பந்த செயல்முறை தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய செயல்முறையுடன் தொடர்புபட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீன் மெய்னுடீனின் கட்சி உறுப்புரிமை உடனுக்குக்கு அமுலுக்குவரும் வகையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் சட்டவிவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), ஊழலுக்கும் சட்டத்தின் ஆட்சியை பாதிக்கும் எந்தவொரு நடத்தைக்கும் எதிராக உறுதியான மற்றும் சமரசமற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. பொது நம்பிக்கையை சீர்குலைக்கும் அல்லது நாம் நிலைநிறுத்தும் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு கொள்கைகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் கட்சி அனுமதிப்பதில்லை. நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்த இடைநீக்கம் அமுலில் இருக்கும். சட்டம் எந்தத் தலையீடும் இன்றி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கட்சி நம்பிக்கை கொள்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கிறது.


குறிப்பிடப்பட்ட நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அவருடைய தனிப்பட்ட செயல்களாகும்; அவை கட்சியின் கொள்கைகள், விழுமியங்கள் அல்லது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.


இந்த விவகாரத்தின் முன்னேற்றங்களை கட்சி தொடர்ந்து கவனித்து வருவதுடன், தனது அரசியலமைப்பும் ஒழுக்காற்று நடைமுறைகளும் ஏற்படுத்திய விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.” எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :