எம்.வை. அமீர்-
இலங்கை ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தினச்சுடர் தேசிய விழா மற்றும் மூன்றாம் கட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2026 நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை, சாய்ந்தமருது பாவா றோயல் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை, அறிவிப்பு, கவிதை, எழுத்துத்துறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பல்துறை ஆளுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிப்புச் செய்து வரும் 50 ஆளுமைகள் இந்நிகழ்வில் தேசிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதற்கமைய, சிறந்த பக்க வடிவமைப்பாளர் விருதுக்கு AHM ஹரீஸ், சிரேஷ்ட அறிவிப்பாளர் விருதுக்கு றம்ஸானா சமீல், வளர்ந்து வரும் இலக்கிய விருதுக்கு R. இஸ்மட், சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுக்கு எம்.ஏ. முஹம்மட், சிறந்த இளம் கவிஞர் விருதுக்கு ஷிபானா அஸீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிரேஷ்ட சாதனைக் கவிஞர் விருதுக்கு சாஹுல் ஜுஹைம், சிரேஷ்ட எழுத்தாளர் விருதுக்கு சூபிற்றுஜ்னுல் மஜீதியா, இளம் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு MM முன்சிப், சிரேஷ்ட இலக்கிய ஆளுமை விருதுக்கு மாஜிதா தவ்ஃபீக் மற்றும் முஸ்தபா மகுஜூது ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
சிறந்த இளம் கவிஞர் விருதுகளுக்கு இபா லாபீர் மற்றும் ULU மஜினா ஆகியோரும், மரபுக்கவி வித்தகர் விருதுக்கு சித்தி சபீனாவும், இலக்கிய எழுத்தாளர் விருதுக்கு கவிமகள் ஜெயவதியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, பல்துறைக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர் விருதுக்கு MSM ஸாகிர், இளம் சமூக சேவைத் தாரகை விருதுக்கு ஜவாஹிரா ரிஸ்வி, சிறந்த இளம் இலக்கியவாதி விருதுக்கு MIF ருஷ்தா, சிரேஷ்ட எழுத்தாளர் விருதுக்கு சேகு முஹம்மத் பெனாசிரா, சிரேஷ்ட எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் விருதுக்கு AR அஹமட் நபாயிஸ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
சிரேஷ்ட கலை இலக்கிய ஆளுமை விருதுக்கு ரஸ்ஸாக் சேகு தாவுத், சிரேஷ்ட கலை இலக்கியவாதி விருதுக்கு நஸ்லின் ரிப்கா அன்ஸார், சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுக்கு கயிலாயப்பிள்ளை ருத்திரன், இளம் சமூக சேவகர் விருதுக்கு முருகையா செல்வகுமாரன் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
சிறந்த அறிவிப்பாளர் விருதுக்கு AM இன்சாப், சிரேஷ்ட கலைஞர் விருதுக்கு MIM முஸ்தபா, சிரேஷ்ட இலக்கிய எழுத்தாளர் விருதுக்கு AM கஸ்புல்லா, சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுக்கு செல்வி வினாயகமூர்த்தி, சிரேஷ்ட கவிஞர் விருதுக்கு மைக்கல் கொலின் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இளம் ஊடக மாமணி விருதுக்கு கலந்தர் பாத்திமா றிசாமா, சிரேஷ்ட இலக்கிய எழுத்தாளர் விருதுக்கு SH மும்தாஜ் பேகம், சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுக்கு MSM அப்துல் மலிக், சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் விருதுக்கு மருதூர் ஜமால்தீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுக்கு நட்பிட்டிமுனை சிராஜ் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
மேலும், சிறந்த கவிஞர் விருதுக்கு அப்துல் வாஹித் முஹம்மத் பாக்கி, இளம் கலை இலக்கிய மாமணி விருதுக்கு முபீதா அமீன், சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதுக்கு வசீலா அபூபக்கர், நடனம் மற்றும் நாட்டார் பாடல் துறைக்கான விருதுக்கு VT தமீம், சஞ்சிகை பிரதம ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் விருதுக்கு அப்னாஸ் வசீர் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
சிரேஷ்ட பல்துறைக் கலைஞர் விருதுக்கு பத்தக்குட்டி மதிபாலசிங்கம், சிறந்த சமூக சேவகர் விருதுக்கு MR அதீபா, சிறந்த சமூக சேவையாளர் விருதுக்கு பாத்திமா ருக்ஷானா, இளம் சமூக சேவகி விருதுக்கு NF நுஸைபா, இளம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர் விருதுக்கு மின்மினி மின்ஹா ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன், பல்துறைக் கலைஞர் விருதுக்கு ச. ரகுதாஸ், சிறந்த சமூக சேவகர் விருதுக்கு அஷ்ஷேய்க் MSM சதீக், சிரேஷ்ட இலக்கிய மாமணி விருதுக்கு அஸ்வான் மௌலானா மற்றும் சேகுலெப்பை பாயிஸா, பல்துறைக் கலைஞர் மற்றும் கவிஞர் விருதுக்கு NM அலிக்கான், பல்துறை எழுத்தாளர் விருதுக்கு சஞ்ஸீதா முஜீப் ரஹ்மான், வளர்ந்து வரும் எழுத்தாளர் விருதுக்கு றிஹானாஹ் முஹம்மட் காசிம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தினச்சுடர் விசேட தேசிய விருதுக்கு மூவர் தெரிவு
இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, தினச்சுடர் விசேட தேசிய விருது மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, சிறந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுக்கு MY அமீர் மற்றும் பாறூக் ஷிஹான் ஆகியோரும், சிறந்த சமூக ஊடகச் செயற்பாட்டாளர் விருதுக்கு கவிஞர் எஸ். ஜனூஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகத்துறை, சமூக ஊடகச் செயற்பாடு உள்ளிட்ட துறைகளில் இவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2004ஆம் ஆண்டு முதல் தொடரும் தேசிய அங்கீகாரம்
தினச்சுடர் தேசிய விருது என்பது 2004ஆம் ஆண்டு முதல் கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து வரும் ஆளுமைகளை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இம்முறை மூன்றாம் கட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வு பல்வேறு துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ஆளுமைகளை ஒரே மேடையில் கௌரவிக்கும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.
சமூகத்தில் பல்வேறு திறமைகளுடன் இயங்கி வரும் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் இளம் தலைமுறை ஆளுமைகளை ஊக்குவித்து, அவர்களின் ஆற்றல்களை அங்கீகரிப்பதற்கான ஒரு கௌரவ மேடையாக இவ்விருது விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வளர்ந்து வரும் இளம் படைப்பாளர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது எதிர்காலத்தில் அவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது பாவா றோயல் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூகப் பணிகளில் சாதனை படைக்கும் ஆளுமைகளை ஒன்றிணைக்கும் ஒரு சிறப்புமிக்க தேசிய விழாவாக அமையவுள்ளது.

0 comments :
Post a Comment