பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் வழிகாட்டல் நிகழ்வு..!

நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மயோன் சமூக சேவை அமைப்பின் அனுசரனையில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் வழிகாட்டல் நிகழ்வு மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம வளவாளராக ஆசிரியர் சபீர் ஹமீட் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பித்தல் மற்றும் கற்கை நெறி தெரிவு தொடர்பான வழிகாட்டலை வழங்கினார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறை தொடர்பில் விஷேட உரையாற்றினார். மேலும் மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக நிகழ்வின் கெளரவ அதிதியாக திடீர் மரண விசாரணை அதிகாரி, மொழிபெயர்ப்பாளர் ஏ.எச்.அல் ஜவாஹீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு இளைஞர் சேவை அதிகாரி அன்வர் அப்துல் கபூர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

சுமார் 120 இற்கும் மேற்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :