கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனுடன் மக்கள் சந்திப்பு



வி.ரி.சகாதேவராஜா-
பொத்துவில் கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் கல்முனையில் கனகர் கிராம மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி மட்டு விஜயத்தோடு ஒட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் நேற்று முன்தினம் அம்பாறை மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.

பொத்துவில் கனகர் கிராம மக்களின் காணி முழுமையாக விடுவிப்பு செய்யப்படாமல் இருப்பது தொடர்பில் கனகர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கல்முனையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அது தொடர்பில் சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி அ.நிதான்சன் மற்றும் முன்னாள் காணி ஆணையாளர் கே. குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :