கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று வியாழக்கிழமை (21) மாலை மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரமணியம் சுபராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும், மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நௌசாத் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.ஜே. முஹ்மினா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர்.
இதன்போது இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான முபீனா பைசல் அமான், ஏ. அப்துல் வாசித், எம்.ஏ. சாபிர், வி. சுகுமார், ஏ.எச்.எம். ஹஸீனா, ஏ.எச். அஹ்சன் றியாசத், எம்.எஸ். உவைத், நிரோஷினி சுபாஷ் சந்திரபோஸ், யூ.எல்.எம். நஸ்ரின் ஹாஜா ஆகியோரும், ஓய்வு பெற்றுச் சென்ற கே. மகேந்திரராசா மற்றும் என். பாக்கியராஜா ஆகியோரும் தங்களது பணிக்காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்பான மற்றும் சிறப்பான சேவைகளுக்காக பாராட்டப்பட்டனர்.
அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், பொன்னாடைகள் போர்த்தி கௌரவிப்பும் செய்யப்பட்டது. நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.










0 comments :
Post a Comment