கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கும் 'அம்மா உணவகம்' திட்டத்தை விரிவுபடுத்தக் கோரல்

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,
சென்னை - 600009.
நகல்கள்:
  1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு, சென்னை.
  2. மாவட்ட ஆட்சியர் அவர்கள், கடலூர் மாவட்டம்.
  3. பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்கள், சென்னை.
மதிப்பிற்குரிய அய்யா / அம்மா,
பொருள்: தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளுக்கும், குறிப்பாக கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கும் 'அம்மா உணவக'த் திட்டத்தை விரிவுபடுத்தி, பயணியர் மற்றும் ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்க வேண்டுதல் - சார்பு.
வணக்கம். 
எங்களது பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) சார்பாக இக்கோரிக்கையைச் சமர்ப்பிக்கிறோம்.
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கும் 'அம்மா உணவகம்' திட்டம் தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தைப் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
குறிப்பாக, கடலூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதியான பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட வேண்டியது மிக அவசியமாக உள்ளது. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
  1. பயணியர் வருகை: வணிகம் மற்றும் கல்வி நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணியர் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
  2. கூலித் தொழிலாளர்கள்: இப்பகுதியில் மீன்பிடித் தொழில், விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழிலைச் சார்ந்த ஏழை தினக்கூலித் தொழிலாளர்கள் மிக அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
  3. மாணவர்கள் நலன்: சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு வரும் ஏழைப் பள்ளி/கல்லூரி மாணவர்களின் மதிய உணவுத் தேவைக்கு இது பெரிதும் உதவும்.
  4. மகளிர் வாழ்வாதாரம்: உள்ளூர் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
எனவே, ஏழை எளிய மக்கள், பயணியர் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தைப் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தி, முதற்கட்டமாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் புதிய அம்மா உணவகம் அமைத்துத் தர மாண்புமிகு தமிழக அரசு ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
முனைவர் அரிமா கோ. அருள் முருகன் M.C., (தலைவர்)                
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., (ஒருங்கிணைப்பாளர்)
பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :