மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள்



நூருல் ஹுதா உமர்-
2026 ஆம் ஆண்டுக்கான கல்முனை வலய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

இப்போட்டியில் இடம்பெற்ற முக்கியமான இரண்டு போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம், பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.எ. ஆபாக் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் பாராட்டப்பட்டுள்ளது. மாகாண மட்டப் போட்டியிலும் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :