தொழிலதிபர் முபாறக் தலைமையிலான விசேட நம்பிக்கையாளர்கள் குழு புதிய நிர்வாகம் நியமிக்கப்படும் வரை சாய்ந்தமருது பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பு நீடிப்பு



சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாகம் மற்றும் நம்பிக்கையாளர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தற்போதைய விசேட நம்பிக்கையாளர்கள் குழு புதிய நிர்வாகம் நியமிக்கப்படும் வரை தொடர்ந்தும் பதவியில் செயல்படலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வழக்கில், தற்போது பள்ளிவாசலுக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நம்பிக்கையாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாகவும், அவர்களின் நியமனம் அரசியல் தலையீட்டின் மூலம் சட்டவிரோதமாக இடம்பெற்றதாகவும் மனுதாரர் தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அதனையடுத்து, குறித்த நியமனத்தை இரத்து செய்யுமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, தற்போதைய விசேட நம்பிக்கையாளர்கள் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப், அந்த நியமனம் சட்டபூர்வமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் எந்தவித சட்டமுரண்பாடும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காணும் முயற்சியை முன்னிறுத்தி கலந்துரையாடல்களை மேற்கொண்டது. மேலும், ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், பள்ளிவாசலின் தற்போதைய யாப்பு விதிகளுக்கு அமைவாக ஜமாஅத்தினரின் ஊடாக புதிய நம்பிக்கையாளர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பரிந்துரைத்தது.

அத்துடன், அந்த இணக்கப்பாட்டை “Terms of Settlement” எனும் சட்டரீதியான உடன்படிக்கையாக பதிவு செய்வது குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் மேலதிக கலந்தாலோசனைகளை மேற்கொண்டு அடுத்த தவணை நாளில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தரப்பினருக்கிடையில் இணக்கம் எட்டப்படாத பட்சத்தில், வழக்கு எழுத்துமூல சமர்ப்பணங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுவரை, சட்டத்தின் பிரகாரம் தற்போது பதவியில் உள்ள விசேட நம்பிக்கையாளர்களோ அல்லது வழமையான நம்பிக்கையாளர்களோ, புதிய நிர்வாகம் நியமிக்கப்படும் வரை “Persons in Charge” என்ற அடிப்படையில் பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வார்கள் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வக்ஃப் சபையினால் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகம் நியமிக்கப்படும் வரை, தொழிலதிபர் முபாரக் தலைமையிலான தற்போதைய விசேட நம்பிக்கையாளர்கள் குழுவின் பதவிக்காலம் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :