தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009.
நகல்:
* மாண்புமிகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு
* முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு / முதல்வரின் முகவரி துறை / முதலமைச்சரின் தனிப்பிரிவு / முதல்வர் ஹெல்ப் லைன், தமிழ்நாடு.
பொருள்: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கேரள மாநிலத்தைப் போன்று தனி அமைச்சகம் அமைக்கக் கோருதல் - சார்பு.
எங்கள் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்களின் சார்பில் இந்த முக்கிய கோரிக்கை மனுவை தங்களின் கனிவான பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது மத்திய ரயில்வே துறையின் கீழ் பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்கள், இருப்புப் பாதை மின்மயமாக்கல், மற்றும் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இன்றியும், நில எடுப்புப் பணிகளில் ஏற்படும் தாமதத்தாலும் நீண்ட காலமாகத் தொய்வடைந்துள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில், மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும், மாநிலத்தின் ரயில்வே திட்டங்களை முழுநேரமாகக் கண்காணிக்கவும் ரயில்வே துறைக்கென தனி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு திட்டங்கள் விரைவாக ஒப்புதல் பெற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுகின்றன.
அதே போன்றதொரு நிர்வாகக் கட்டமைப்பைத் தமிழகத்திலும் உருவாக்க வேண்டியது தற்போதைய அவசியத் தேவையாக உள்ளது. எனவே, தமிழக அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தனி அமைச்சகம்: கேரள மாநில மாதிரிப் படி, தமிழகத்திலும் ரயில்வே திட்டங்களைக் கவனிப்பதற்கென பிரத்தேகமாக ஒரு தனி அமைச்சகத்தையும், அதற்கென ஒரு தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும்.
திட்டங்கள் முடுக்கம்: இந்த அமைச்சகத்தின் மூலம் தமிழகத்தில் கிடப்பில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
நிவாரணம் மற்றும் நில எடுப்பு: மாநில அரசு மற்றும் மத்திய ரயில்வே துறைக்கு இடையேயான நில எடுப்புப் பிரச்சனைகளை இந்த அமைச்சகம் மூலம் உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும்.
உள்ளூர் தேவைகள்: பரங்கிப்பேட்டை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கூடுதல் ரயில்கள் நின்று செல்லவும் இந்த அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும்.
மக்களின் மிக முக்கியமான, மலிவான பொதுப் போக்குவரத்தாக விளங்கும் ரயில்வே துறையை மேம்படுத்த, தமிழக அரசு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்க வேண்டும் எனப் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
முனைவர் அரிமா கோ. அருள் முருகன் M.C., (தலைவர்)
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., (ஒருங்கிணைப்பாளர்)
பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS)
www.importmirror.com

0 comments :
Post a Comment