மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு !


நூருல் ஹுதா உமர்-


ருதம் கலைக்கூடல் மன்றத்தின் மாதாந்த அமர்வு சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா, ஓய்வு பெற்ற அதிபர் யூ.எல். நஸார், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நௌசாத் உள்ளிட்ட கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாசார விழாவில் 2025 ஆம் ஆண்டிற்கான “வித்தகர் விருது” பெற்ற ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எம்.ஐ. அஸ்ரப் அவர்களும், “இளம் கலைஞர் விருது” பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல் அவர்களும் விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.

கலை மற்றும் கலாசார துறைகளில் இவர்களின் நீண்டகால பங்களிப்புகள் பாராட்டப்பட்டதுடன், இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் நிகழ்வில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

மேலும், கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளை சமூக மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மருதம் கலைக்கூடல் மன்றம் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நிகழ்வு கலாசார மற்றும் கலை ஆர்வலர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிறைவுற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :