கனடாவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த கலை மன்றத்தின் 24 ஆவது வருட தமிழ் திறன் போட்டிகள்



வி.ரி.சகாதேவராஜா-
னடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் தனது 24 வது வருடாந்த தமிழ்த்திறன் போட்டிகளை கடந்த 17 ஆம் திகதி ஸ்காபரோ சிவிக் நிலையத்தில் தலைவர் சுதேசன் பத்மநாதன் தலைமையில் நடாத்தியது.

வழமைக்கு மாறாக இம் முறை அதிகூடிய 138 மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றமை ஒரு சாதனையாகும்.

பேச்சு, திருக்குறள், பண்ணிசை, ஆத்திச்சூடி ,கொன்றை வேந்தன், சொல்வதெழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இந்த வரலாறு படைத்த போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிச் சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜூன் மாதம் 14 இல் நடைபெறவிருக்கிறது.

பேராசிரியர் முனைவர் இளையதம்பி பாலசுந்தரம் பிரதம நடுவராகப் பணியாற்றினார். மேலும் பேராசிரியை விமலா பாலசுந்தரம் உள்ளிட்ட பல நடுவர்களும் கலந்து கொண்டனர். மற்றச் செயலாளர் கே.பிரஷாந்த் பொருளாளர் சிவ.உதயகுமாரன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் இரவு பகலாக செயற்பட்டிருந்தனர்.

முன்னாள் தலைவர்களான வல்.புருஷோத்தமன், கே.ஏரம்பமூர்த்தி மற்றும் விசு.கணபதிப்பிள்ளை உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.
இணைப்பாளர் கே.குமரகுரு மற்றும் பலரின் அயராத முயற்சியினால் இம்முறை அதிகூடிய மாணவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :