அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி பௌல்ராஜ் தலைமையில், இலங்கையில் உள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் 19 பேர் கொண்ட தூதுக்குழு, 2026 மே 10 முதல் 16 வரை இந்தியாவிற்கு .விஜய் மேற்கொண்டிருந்தனர். இத் தூதுக்குழுவில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தின் பொதுச்செயலாளர் உட்பட இலங்கை பாராளுமன்றத்தின் 4 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும். இதனை, இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் இணைந்து, ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய மற்றும் இலங்கை பெண் தலைவர்களுக்கு இடையே பாராளுமன்ற ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், உறவுகளை வலுப்படுத்தவும் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி மேதகு அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் கூட்டு பார்வையைத் தொடரும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது.
டெல்லி காவல்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கலந்துரையாடல்கள் உட்பட, இந்தியாவின் ஆளுகை மாதிரிகள் மற்றும் பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் உள்ள கவனம் செலுத்தப்படும் முன்னெடுப்புகள் குறித்து தூது குழுவினருக்கு விரிவான அறிமுகம் வழங்கப்பட்டது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு (UIDAI) மேற்கொண்ட பயணத்தின் போது, அனைவரையும் உள்ளடக்கிய சேவை வழங்கல் தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தின் பங்கு வலியுறுத்தப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் உந்து சக்திகளாகப் பெண்களின் பங்கு குறித்த வட்டமேசை கலந்துரையாடலுக்காக FICCI மகளிர் அமைப்பு (FLO) தூதுக்குழுவினர் உபசரித்தது. மேலும், இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையே சட்டமன்ற செயல்முறைகள், பாலின வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்ற குழுக்களின் அமைப்பு மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து PRIDE அமைப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 comments :
Post a Comment