கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய நிரந்தர அதிபராக சம்மாந்துறை நௌஸாத் பொறுப்பேற்பு!

வி.ரி.சகாதேவராஜா-

ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத் நேற்று (27) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச் சமயம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இள வயதிலேயே திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களங்களில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மூதூர், சம்மாந்துறை, கிண்ணியா ஆகிய வலயக் கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
மேலும், மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகவும் சேவையாற்றியவர்.

இவர், கல்வி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :