இந்த அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுத்து வருகிறது. தொழிலாளர் நலனை வலுப்படுத்தும் சட்டங்கள் வெறும் அரசியல் வாக்குறுதிகளாக அல்லாமல், மக்களின் நாளந்தோறும் வாழ்வில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பள உயர்வு, நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு வழங்கப்பட்ட நியாயத்தின் ஆரம்பமாகும். தலைமுறைகள் கடந்தும் உழைத்த அந்த மக்களின் குரல் இன்று கேட்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதேபோல், நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பெரும் பங்காற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடற்றொழிலில் ஈடுபடும் உழைப்பாளிகளின் வாழ்க்கையும் எங்களின் கவனத்தில் உள்ளது. கடலில் தினமும் போராடும் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூக நலனை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டின் மே தினம் வெறும் நினைவு நாளாக அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போராட்ட மேடையாக மாற வேண்டிய அவசியம் உள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக கடந்த காலங்களில் போராடியபோது அவர்கள் எதிர்கொண்ட அநீதிகளை நாம் மறக்க முடியாது.
அந்த காலத்தில் தொழிலாளர்களின் குரலை அடக்க முயன்றவர்கள் இன்று தொழிலாளர் நலனின் காவலர்களாக நடிப்பது வரலாற்றின் மிகப் பெரிய பரிகாசமாகும். இத்தகைய போலித்தனங்களுக்கு இடமளிக்காமல், உண்மையான தொழிலாளர் விடுதலையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தில் ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
உழைக்கும் மக்களின் கரங்கள் ஓங்கட்டும்!
வியர்வையின் மதிப்பு உயரட்டும்!
அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் எனது இதயம் கனிந்த செம்மையான மே தின வாழ்த்துக்கள்!
க. கிஷாந்தன்
ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

0 comments :
Post a Comment