சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “Ride Colombo 2026” எனும் பெண்கள் மிதிவண்டி சவாரி நிகழ்வு நேற்று (07) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு காலிமுகத்திடலில் இருந்து உற்சாகமாக ஆரம்பமானது.
இந்நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்கள், விமானப்படை மற்றும் கடற்படை பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மிதிவண்டி சவாரியில் ஈடுபட்டனர். பெண்களின் சக்தி, ஒற்றுமை மற்றும் சமூக பங்களிப்பை வலியுறுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த சிறப்பு மிதிவண்டி நிகழ்வு காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பித்து கொழும்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலேவ் ஐலந்து பகுதிகளை கடந்து 20 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரண்டு தூரங்களில் நடைபெற்றது.
சவாரி நிறைவடைந்த பின்னர் காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த சிவப்பு விரிப்பு வழியாக பங்கேற்ற பெண்களுக்கு வெற்றி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களினால் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை முன்னிட்டு கொழும்பில் உள்ள “City of Dreams” ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இத்திட்டத்தின் நிறுவனர் மங்கள கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பெண்களை ஒற்றுமை, வலிமை மற்றும் நோக்கமுள்ள உறுதிப்பாட்டுடன் ஒன்றிணைப்பதே இந்நிகழ்வின் நோக்கம்” என தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டிற்கான கோஷமாக “என் சவாரி – என் குரல்: மாற்றத்தின் சக்கரம்” எனும் ஊக்கமூட்டும் வாசகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“Ride Colombo 2026” என்பது வெறும் மிதிவண்டி சவாரி நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் முன்னேறி தனது குரலை வெளிப்படுத்தவும், சமூக முன்னேற்றத்தின் மாற்றச் சக்கரத்தில் பங்கெடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த தளமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)



.jpg)




.jpg)

0 comments :
Post a Comment