ஸ்ரீலங்கா தெற்காசிய மகளிர் ஊடகம் (SAWM–SL) ஏற்பாட்டில், நாட்டின் ஆங்கில மொழி மூலமான பத்திரிகைகள், டிஜிட்டல் மீடியா மற்றும் ஒலிபரப்பு ஊடகத் துறைகளில் சிறந்து விளங்கும் 25 பெண் ஊடகவியாளர்களைத் தேர்வு செய்து, பிப்ரவரி 17ஆம் திகதி விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு இலங்கை பத்திரிகை நிலையம் தொழில்நுட்ப பங்காளியாகவும், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் Dur Yog Nivaran நிறுவனம் ஆகியவை அனுசரணையாளர்களாகவும் இணைந்து பங்களித்தன.
இப் பயிற்சியின் போது, அனர்த்தத்திற்குப் பிந்தைய ஊடகச் செய்திகளில் பாலின நோக்குநிலையை வலுப்படுத்தல் (Strengthening gender perspectives in post-disaster media coverage), Cyclone Ditwah தொடர்பான செய்தியளிப்பு, ஒழுக்கநெறி, உள்ளடக்கத்தன்மை மற்றும் சமூக பொறுப்புணர்வு கொண்ட பத்திரிகைச் செயல்பாடுகளை ஊக்குவித்தல் (Promoting ethical, inclusive and socially accountable journalism) போன்ற தலைப்புகள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், கடந்த சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் அனுபவங்கள், அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோ மற்றும் ஒலித் தொகுப்புகள், பொதுமக்கள் எதிர்நோக்கிய சவால்கள், சோக சம்பவங்கள், பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய ஊடக அணுகுமுறைகள் குறித்து (2015–2023) காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆழமாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா தெற்காசிய மகளிர் ஊடக பிரதிநிதிகளான மாதவி ஆரிய பண்டு, குமுதினி சாமுவேல், மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் தில்ருக்ஷி ஹந்துனெத்தி ஆகியோர் உரையாற்றினர்.

0 comments :
Post a Comment