ZR Cake Kingdom & ZR Beauty World நடத்திய பயிற்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
ZR Cake Kingdom மற்றும் ZR Beauty World நிறுவனங்களின் கொழும்பு பணிப்பாளர் சனுசியா ரகுமான அவர்களின் ஏற்பாட்டில், தொழில்முறை பயிற்சி வகுப்புகள், செயல்முறை போட்டிகள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா 2026 ஜனவரி 24 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாசிம் உமர் அவர்கள், அவர்களது துணைவியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அதேவேளை, விசேட விருந்தினர்களாக ஏ.கே.எஸ். சாஜிதா நசீர்,
வி.ஆர். கேக்ஸ் டிசைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரேனு தர்சா,
சா கொஸ்மட்டிக் இவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பஸ்னா, சா பியூட்டி சலூன் உரிமையாளர் சானா பாஸ், அஸ்மா ஆகியோர் கலந்து கொண்டதுடன், ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அழைப்பாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது Cupcake அலங்காரம், Henna கலை, Cake Making மற்றும் Craft உள்ளிட்ட துறைகளில் செயல்முறை அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவிகளுக்கும், போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிப் பரதங்கள் பிரதம மற்றும் விசேட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

விழாவில் கருத்துத் தெரிவித்த  பிரதம அதிதி ஹாசிம் உமர் அவர்கள், “பெண்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் இத்தகைய பயிற்சி நிகழ்வுகள், அவர்களின் பொருளாதார சுயாதீனத்திற்கு வழிவகுக்கும் முக்கியமான படிக்கட்டாகும்” என்று தெரிவித்தார்.

மேலும், ZR Cake Kingdom மற்றும் ZR Beauty World நிறுவனங்களின் கொழும்பு பணிப்பாளர் சனுசியா ரகுமான அவர்கள், “பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதே எமது நோக்கம்”
என்று குறிப்பிட்டார்.
மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு, கலந்து கொண்ட அனைவரின் பாராட்டையும் பெற்றதுடன், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகளுக்கு புதிய நம்பிக்கையையும், எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கான ஊக்கத்தையும் வழங்கியதாக அமைந்தது.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :