நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த அவசர சேவை வாகனம் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக பல ஆண்டுகள் தாமதமான இத்திட்டம், ஊர் மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நல் உள்ளங்களின் தாராளமான நிதியுதவியால் நிறைவேறியுள்ளது.
நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் மற்றும் அக்கரைப்பற்று அல்-பர்ஷான் ஜனாஸா சேவை அமைப்பின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். ரியாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் (ஆசிரியர்) தலைமையில், குறித்த அவசர சேவை வாகனம் மக்களின் சேவைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இச்சேவைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அமைப்பின் சார்பில் இதயபூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டது டன், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உயரிய நற்கூலிகளை வழங்கி, செல்வத்திலும் வாழ்வில் பரக்கத் செய்வானாக எனப் பிரார்த்தனை செய்யப்பட்டது. இம்மகத்தான சமூக சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட அனைவரினதும் பிரார்த்தனைகளும் ஆதரவுகளும் அவசியம் எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment