நாவிதன்வெளியில் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் மார்ச் மாதம் 01ம் திகதி தொடக்கம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கை பேரவை தீர்மானத்திற்கு அமைய குறித்த வேலைத்திட்டம் நேற்று(04) நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் சவளக்கடை மற்றும் மத்திய முகாம் பொலிசாரோடு இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் போது, பொது போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் “விக்கின்ற அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் அகன்று செல்” என்ற ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனா ஜெகீர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :