ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர், சவுக்கடி புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் நேற்று இரவு (23.01.2026) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சவுக்கடி கடற்கரையிலிருந்து ஏறாவூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த கெப் ரக வாகனத்துடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி M.S.M. நஸீர் சடலங்களை பார்வையிட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலங்களை கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் முகைதீன் அஸ்மத் ஷஹி (18)
மற்றும் செய்னுலாப்தீன் முகம்மது அக்மல் (20) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏறாவூரைச் சேர்ந்த இவ்விரு இளைஞர்களும் முச்சக்கர வண்டி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.





0 comments :
Post a Comment