கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் அடித்தளம் என்பதையும், பொருளாதார சவால்கள் காரணமாக எந்த மாணவரின் கல்வியும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் மகளிர் விவகார இணைப்பாளர்களான ஹனான் மற்றும் சிஹாமா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பள்ளிப் பைகள் மற்றும் அவசியமான கல்வி உபகரணங்களை நேரடியாக வழங்கி வைத்தனர். மாணவர்களுடன் உரையாடிய அவர்கள், கல்வி மூலம் உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்றும், தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தனர்.
இந்த உதவி திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூகத்தில் கல்வி சார்ந்த பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக அமைந்தது. எதிர்வரும் காலங்களிலும் நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற கல்வி உதவி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

0 comments :
Post a Comment