பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து – அரசாங்கத்தின் முடிவு வரவேற்கத்தக்கது – ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்



பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால், பெரும் செல்வந்தர்களும் வர்த்தகர்களும் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறுவார்கள்; சாதாரண பொதுமக்கள் அரசியலில் இருந்து விலக நேரிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்ட கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது ஒரு தொழிலாக அல்ல; அது மக்களுக்குச் செய்யும் சேவையாகவே பார்க்கப்பட வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய முன்வரும் ஒருவர் சம்பளம், சலுகைகள் அல்லது ஓய்வூதியம் போன்ற நிதி நன்மைகளை எதிர்பார்க்கக் கூடாது. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது மக்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

இன்றைய தேர்தல் முறையின் யதார்த்த நிலைமை என்னவெனில், பணக்காரர்கள் அல்லது பணக்காரர்களின் ஆதரவு இல்லாமல் ஒருவரால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமானதாக உள்ளது. இந்தச் சூழலில், ஓய்வூதியம் இரத்து செய்யப்படுமானால், பணக்காரர்கள் அரசியலில் போட்டியிடும் ஆர்வம் குறையும். காரணம், பணம் உள்ளவர் மேலும் பணம் சேர்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவார். ஓய்வூதியம் போன்ற நிதி ஆதாயங்கள் இல்லாதபட்சத்தில், அவர் பாராளுமன்ற அரசியலுக்குள் வராமல் தனது சொந்த தொழிலில் ஈடுபடுவார்.

இதன் மூலம், உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தியாக உணர்வுடன் கூடிய சாதாரண பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

மேலும், ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் நிலைப்பாடு தெளிவானதாகும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளமும் நிறுத்தப்பட்டு, அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் நாட்களுக்கு மட்டும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.

ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த முனையும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சரியானதும், மக்கள் நலனுக்கேற்றதுமான தீர்மானமாகும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

முஸ்னத் முபாறக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :