அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்



க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததன் காரணமாக கண்டி விசேட கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலைக்கு சென்ற மேற்படி கலால் திணைக்கள அதிகாரிகள் ஒரு மதுபான போத்தலும், ஒரு பியர் போத்தலும் கொள்வனவு செய்த போது இவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தமையை கண்டறிந்துள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் குறித்த மதுபானசாலைக்கு சீல் வைத்தனர்.

இதன்போது இதற்கான தண்டப்பணத்தை செலுத்தும் வரை குறித்த மதுபானசாலையினை மீண்டும் திறக்க முடியாது எனவும், கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி மற்றும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :