அனைத்து பல்கலைக்கழகங்களின் விளையாட்டு விழா – ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான ஆரம்பம்



லங்கையின் 16 அரச பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெறும் வருடாந்த விளையாட்டு விழா (Inter-University Sports Festival) நேற்று (04.09.2025) ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிறப்பாக ஆரம்பமானது. இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இவ் விழாவில், அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பதிவாளர்கள், நிதியாளர்கள், உட்பட பல்கலைக்கழகங்களில் முக்கியமான நிர்வாகப்பிரமுகர்கள் அனைவரும் பங்கேற்றதுடன், நாட்டின் உயர் கல்விக் கட்டமைப்பின் ஒற்றுமையும், விளையாட்டு ஊக்கமும் வெளிப்பட்டது.

இந்த விளையாட்டு விழாவில், மாணவ, மாணவிகள் பங்கேற்கும் 24 விதமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றன. இதில் தடகளம், கபாடி, பந்தய ஓட்டங்கள், நீச்சல், கிரிக்கெட், பாசுக்கெட் பந்து, கைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், படகோட்டிப் போட்டிகள் உள்ளிட்ட பல பிரிவுகள் அடங்குகின்றன.

விழாவின் நிறைவு நிகழ்வு எதிர்வரும் 21.09.2025 அன்று நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது கல்வி வாழ்க்கையின் ஒரு அங்கமாக விளையாட்டையும் மேற்கொண்டு, பரஸ்பர ஒற்றுமையை வளர்த்துக்கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த விழாவை காணுகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதுடன், மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கின்றது.

தகவல் வழங்கியவர்:
முகம்மத் இக்பால்
உடற்கல்வி போதனாசிரியர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :