உயர்தர தொழில்னுட்ப பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்ற இஸ்ரா ஹஷ்பானி பாராட்டி கெளரவிப்புமாளிகைக்காடு செய்தியாளர்-
ண்மையில் வெளியான க.பொ.த (உ/த) பரீட்சை - 2023 (2024) பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் அம்பாறை மாவட்ட ரீதியாக முதலாம் நிலையைப் பெற்ற கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஐ.எப். இஸ்ரா ஹஷ்பானி சாதித்துள்ளார். மேலும் இந்த பாடசாலையை சேர்ந்த மாணவியான எம்.எம்.எப். பத்தூனா மூன்றாம் நிலை பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்ற கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (04) மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.

இதன்போது உயர்தர தொழில்நுட்ப பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்ற இஸ்ரா ஹஷ்பானி பாராட்டி கெளரவிக்கப்பட்டார். இந்த மாணவிகளை சிறந்த முறையில் வழிநடத்தி நெறிப்படுத்திய பகுதித் தலைவர், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :