புரவலர் ஹாஷிம் உமர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள், இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பூரணமான கல்வியறிவை பெறுவதென்றால் சூழலுக்கு ஏற்றவாறு கற்கும் வழிமுறைகளையும் மாற்றி முன்னேறிச்செல்ல வேண்டும். இப்போதைக்கு Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது. இவைகளையெல்லாம் மாணவர்கள் கையாள்வது என்றால் மாணவர்களுக்கு கணணி என்பது மிகப்பிரதானமாகும்.
வசதிகுறைந்த மாணவர்களுக்கு கணணி ஒன்றை பெற்று அவர்களது கல்வியை தொடர்வது மிகுந்த கடினமான விடயமாகும். இந்த நிலையை உணர்ந்தே நாங்கள் இவ்வாறான மாணவர்களுக்கு மடிகணணிகளை வழங்க தீர்மானித்தோம். எங்களால் முடிந்த அளவு மாணவர்களுக்கு கட்டம் காட்டமாக மடிகணணிகளை வழங்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மடிகணணிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களது பெற்றோரும் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு நன்றிகூறி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.














0 comments :
Post a Comment