மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முஷாரப் எம்.பி விஜயம் : பள்ளிவாசலுக்கு நிதியொதுக்கீடும் செய்தார்.



மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நிர்மாண பணிகளுக்கு காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், பள்ளிவாசல் உதவித்தலைவருமான ஏ.எம். ஜாஹீர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து செய்துமுடிக்கப்பட்ட 05 லட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளிக்கும் நிகழ்வும், நம்பிக்கையாளர்கள் சந்திப்பும் இன்று (11) மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான யூ.எல்.என். ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. பௌஸரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள், தொடர்ந்தும் பள்ளிவாசலின் தேவைகளுக்கு எதிர்காலத்தில் தான் உதவ தயாராக இருப்பதாகவும், மக்கள் பணியை சிறப்பாக முன்னெடுக்க 100 மில்லியனை ஒதுக்கித்தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஆலோசகர் ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ் உட்பட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மௌலவி ஏ.எம். அஸாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நிதியொதுக்கீட்டுக்கான கடிதத்தை நிர்வாகிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கையளித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :