மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை (1) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியால் மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் அதிவேகமாக பயணித்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றையவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளான இருவரும் களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment