திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்
'மாணவிகள் தமது மார்க்க விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை எழுதவரும் போது, அவர்களின் முகம் மற்றும் காதுகள் வெளியில் தெரியவேண்டும் என்று கோரப்படுவது, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகும். அப்படி இருந்தும் பரீட்சை நாட்களில் மாணவிகளை அதிகாரிகள் தலையை மறைத்து பர்தா அணிய வேண்டாம் என கட்டாயப்படுத்தியமையினால், அவர்களில் பலர் அடுத்த தினங்களில் தலை தெரியும்படி துப்பட்டா அணிந்து வந்து பரீட்சை எழுதினர்.
ஒரு மாணவரின் வாழ்வின் முக்கிய பரீட்சை என்றதன் அடிப்படையில், பதட்டத்துடனும் பெரும் கனவுகளோடும் வரும் மாணவர்களை வரவேற்று அவர்களை முறையாக பரீட்சை எழுதவும், தவறுகள் நடக்கும் முன் தெளிவு படுத்தி மாணவர்களுக்கு உதவுவதற்குமே பரீட்சை நிலையத்தில் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதனை மறந்து, மாணவிகள் காதுகளை மறைத்து பரீட்சைக்கு வந்தார்கள் என குற்றம் சுமத்தி, அம்மாணவிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்து பரீட்சை முடிவுகளை இடை நிறுத்துவது என்பது முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மார்களின் வயிற்றைக் கிழித்து 06 மாத சிசுவை வெளியில் எடுத்து சுவரில் அடித்து கொலை செய்த பாசிஸப் புலிப் பயங்கரவாத மனநிலையின் தொடர்ச்சியாகும்' எனவும், சபீஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் என்போர் - தாய் மற்றும் தந்தைக்கு சமாந்தரமானவர்கள். அப்படிப்பட்ட புனிதமான தொழிலைச் செய்பவர் மூர்க்கர்களாக இருக்கும்வரை நாடு ஒருபோதும் முன்னேறாது எனவும் கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மனநிலையில் இருந்து கொண்டு - வடக்கையும் கிழக்கையும் இணைக்கவேண்டும் என்று கூக்குரலிடுவது கேலிக்குரியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment