கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுகள் மற்றும் 40 திணைக்களங்களில் மாற்றம்!-ஆளுநரால் புதிய வர்த்தமானி வெளியீடுகிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மாற்றியமைத்துள்ளதுடன், அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் 8,031 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 2695 வேலைத்திட்டங்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடத்தில் வலுவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, புதிய கட்டமைப்பினை உருவாக்குவதற்காக இவ்வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே இவ்வாறான ஒரு அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :