தேசிய காங்கிரஸ் தலைவரின் முயற்சியில் சாய்ந்தமருது தோணா, அபிவிருத்தியை நோக்கி நகர்கிறது.



சாய்ந்தமருதின் சோகம் என்று பேசப்படும் தோணாவும் அதனை அண்டிய பிரதேசங்களும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் அபிவிருத்தியடையாது காணப்படுகின்ற சூழலில், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அபிவிருத்தியில் முதற்படியை தொட்டது.

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (2024.06.05) சாய்ந்தமருது தோணாவையும் அண்டிய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சபான் அவர்களது தலைமையில் குழு ஒன்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தது.

இந்த குழுவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட பிரதி பணிப்பாளர் நிசாந்த குருநெரு, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலக பொறுப்பாளர் திருமதி வீரவாகு, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர் திருமதி ஜெ. தியாகராஜா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் படவரைஞர் எம்.சி.எம்.சி. முனீர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எம்.முஸ்ஸம்மில் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் றசீட், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அலுவலர் எம்.எச். முபாறக் உள்ளிட்டவர்கள் அடங்கியிருந்தனர்.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது முகத்துவாரம் பிரதேசத்தில் இருந்து மாளிகா வீதிவரைச் சென்று அங்கிருந்து மீண்டும் முகத்துவாரம் வரை நடைபாதை ஒன்றை அமைப்பதற்கும் தோணாவை முழுமையாக துப்பரவு செய்வதற்கும் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்குமான கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன் அதற்கான இடங்களும் அடையாளம் காணப்பட்டன.

குறித்த திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கு ஏதுவாக திட்ட அறிக்கைகளை விரைவாக தந்துதவுமாறு சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சபான் அவர்கள் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.











 















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :